உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க உத்தரவு!

காரமடை அரங்கநாதர் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க உத்தரவு!

மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில் 1.50 கோடி ரூபாய் செலவில் ஏழு நிலை ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் நேற்று ஆய்வு செய்தார்.’கோவிலில் உள்ள பழைய கல் மண்டபங்களுக்கு பாதிப்பு வராமல், திருப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், கும்பாபிஷேகம் நடத்தவும் விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நேற்று மாலை ஈச்சனாரி கோவிலை ஒட்டி 36 லட்ச ரூபாய் செலவில் அன்னதானக்கூடம் கட்டும் பணியையும், ஆணையர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !