உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் ஆன்மிக டிவி சேனல் துவக்கம்!

புதுச்சேரியில் ஆன்மிக டிவி சேனல் துவக்கம்!

புதுச்சேரி: புதுச்சேரியில், ஸ்ரீ லலிதா டிவி என்ற புதிய ஆன்மிக சேனல் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காராமணிக்குப்பம், மாரியம்மன் நகர் மூன்றாவது  குறுக்குத் தெருவில் உள்ள சிதம்பர குருக்கள் இல்லத்தில், ஆன்மிக சேனலான, ஸ்ரீ  லலிதா டிவி துவக்க விழா நேற்று நடந்தது. ஸ்ரீ லலிதா டிவியை, சிதம்பர குருக்கள்  இயக்கி வைத்தார். நிகழ்ச்சியை, சென்னை ஸ்ரீமதி அன்னபாபா என்கிற  குமாரபாபா, குத்து விளக்கேற்றி  துவக்கி வைத்தார். விழாவில் சீத்தாராமன், கீதா சங்கர், கீதா ரமேஷ், சுப்ரமணி, ஸ்வர்னேஸ், நிதிஷ் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்திருந்தவர்களை, கீதாராம் சாஸ்திரிகள் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !