உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

சிவலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37161_114426885.jpgசிவலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37161_114436963.jpgசிவலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு!கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நேற்றுமுன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு போன்றவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சுவாமிகளை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசி விஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலங்கண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !