உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனின் புகழ் பாடுவதே மனித பிறவியின் நோக்கம்

இறைவனின் புகழ் பாடுவதே மனித பிறவியின் நோக்கம்

கடலுார்: இறைவன் புகழை பாடுவதும்,  கேட்பதுமே மனித பிறவியின் நோக்கம் என, கடலுார் முரளிதர சர்மாஜி உபன்யாசம் செய்தார். கடலுார்  கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, ஸ்ரீமத்வ சித்தாந்த ÷ சவா சங்கம் சார்பில், பரனுார் கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் சிஷ்யரான, கடலுார் முரளிதர சர்மாஜியின் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் ஏற்பாடு  செய்துள்ளது. நேற்று துவங்கிய உபன்யாசம், வரும் 27ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 வரை நடக்கிறது. முதல் நாளான  நேற்று ஸ்ரீமத் பாகவத மகாத்மியம், ஸ்ரீ பரீஷித் சரித்ரம் என்ற தலைப்புகளில்  முரளிதர சர்மாஜி உபன்யாசம் செய்தார். அப்போது, காசி, கயா ÷ பான்ற புன்னிய ஸ்தலங்களில் செய்யும் பூஜைகள் மற்றும் பிற பரிகாரங்களாலும் நீக்க முடியாத கொடிய பாவங்கள் கூட ஸ்ரீமத் பாகவதம் கேட்பதால் விலகும் என்றும், மனித பிறவியின் நோக்கமே இறைவனுடைய புகழைப் பாடவும், கேட்கவும் என்பதுமே ஆகும். பஞ்ச பாண்டவர்கள்  வழியில் வந்த பரிஷத் மகாராஜன், ஒருமுறை காட்டிற்கு வேட்டைக்கு சென்றபோது இறந்த பாம்பை, அங்கு தவம் இருந்த முனிவர் மீது தவறுதலாக  போட்டுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முனிவரின் மகன், 7 நாளில் தக்சன் எனும் பாம்பு தீண்டி இறப்பாய் என ராஜாவுக்கு சாபம் விட்டார்.   இந்த சாபத்தில் இருந்து விடுபட, பாகவதம் கேட்பதுதான் சரியான வழி என, பகல், இரவு பாராமல் பசி- தாகம் மறந்து ஸ்ரீசுகர் கூறிய பாகவதத்தைக்  பரிஷத் மகாராஜன் கேட்டு இறைவனடி சேர்ந்தார். எனவே, இறைவன் புகழை கேட்பது மட்டுமே போதுமானது என, முரளிதர சர்மாஜி  உபன்யாசம்  செய்தார். இரண்டாம் நாளான இன்று (௨௨ம் தேதி) மாலை 6:30 மணிக்கு பிரகலாத சரித்திரம் என்ற தலைப்பில் உபன்யாசம் செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !