மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
3940 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
3940 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
3940 days ago
புதுச்சேரி: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கொல்கத்தாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல வகையான அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. கார்த்திகை தீபத் திருவிழா, வரும் டிச., 5ம் தேதி நடக்கின்றது. இதையொட்டி, புதுச்சேரி கொசக்கடை வீதி உள்ளிட்ட பல இடங்களில் அகல் விளக்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. காமராஜர் சாலையில் (ஆனந்த ரங்கப்பிள்ளை நகர் அருகே), கொல்கத்தாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள வண்ண, வண்ண அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. அகல் விற்பனை செய்யும் சேலத்தை சேர்ந்த சக்திவேல் கூறும் போது, கொல்கத்தாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அகல் விளக்குகள், மற்றும் சேலம் பகுதியில் பாரம்பரிய முறையில் களி மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்பனைக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
3940 days ago
3940 days ago
3940 days ago