உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதரில் மறைந்த சிவாலயம்; மீண்டும் நடக்குமா பூஜை?

புதரில் மறைந்த சிவாலயம்; மீண்டும் நடக்குமா பூஜை?

பள்ளிப்பட்டு: சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, பழமையான சிவாலயம், புதரில் மறைந்து கிடக்கிறது.  கோவிலை சீரமைத்து, மீண்டும்  வழிபாட்டிற்கு கொண்டு வர, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான கோவில்: கொற்றலையின் உப நதியான லவா நதிக்கரையில், பள்ளிப்பட்டு அடுத்த, வெளியகரம் கிராமம் அமைந்துள்ளது. அங்கு,  புவனேஸ்வரி உடனுறை பிரதீஸ்வரர், மரகதவள்ளி உடனுறை சோமநாதீஸ்வரர், திருமல்லீஸ்வரர் மற்றும் பெருமாள் என, பழமையான கிராம கோவில்கள் உள்ளன. அதில், பெருமாள் கோவிலில் உள்ள சுவாமியின் பெயரும், திருமல்லீஸ்வரர் கோவிலில் உள்ள அம்மனின் பெயரும்  கிராமவாசிகளுக்கு தெரியவில்லை. மலை மீது உள்ள சோமநாதீஸ்வரர் மற்றும் ஊருக்குள் உள்ள  பிரதீஸ்வரர் கோவில்களில் மட்டும், தினசரி பூ ஜைகள் நடந்து வருகின்றன.

சுவர்கள் சிதிலம்: பெருமாள் கோவிலும், திருமல்லீஸ்வரர் கோவிலும் பாழடைந்து கிடக்கின்றன. திருமல்லீஸ்வரர் கோவில் துாண்களில் அழகிய  சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும், கோவில் மேல் தளத்திலும் செடிகள் முளைத்து, மரங்களாக வளர்ந்துள்ளன. இதனால், ÷ காவில் சுவர்கள் இடிந்து வருகின்றன. வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதாவது: திருமல்லீஸ்வரர் கோவில், பல்லவர்கள்  காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த, 70 ஆண்டுகளாகவே, இந்த கோவில் பராமரிப்பு இன்றி, பாழடைந்து கிடக்கிறது. கோவிலின்  தென்மேற்கு பகுதியில் உள்ள, முருகன் கோவில் மட்டும், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் வரை, வழிபாட்டில் இருந்து வந்தது.

கோரிக்கை: கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், அதில் தினசரி பூஜைகள் நடத்தி வந்தார். அவரது மறைவிற்கு பின், முருகர் கோவிலும், பூஜை  இன்றி பாழடைந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த கோவில்களை சீரமைத்து, மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வர பக்தர்கள் ÷ காரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !