உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பன் சிலை அமைப்பு!

ஐயப்பன் சிலை அமைப்பு!

சபரிமலை ஐயப்பன் ஆனந்த சொரூபனாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் அருள்பாலிக்கிறார். மூன்று விரலை மடக்கி, ஆட்காட்டி விரலால் பெருவிரலைத் தொட்டுக் கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். சித் என்றால் அறிவு. இந்த வார்த்தையே சின் என திரிந்துள்ளது. ஐயப்பனின் மடங்கிய மூன்று விரல்கள் நம்மிடமுள்ள ஆணவம், கன்மம் (பாவ,புண்ணிய பலன்கள்), மாயை (உலக வாழ்வு நிலைத்திருப்பது என்ற எண்ணம்) ஆகியவற்றைக் குறிக்கும். ஆட்காட்டி விரல் ஜீவாத்மாகிய மனிதனைக் குறிக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய ஐயப்பனைச் சுட்டிக்காட்டுகிறது. மனிதன் இந்த மூன்று குணங்களையும் விட்டு விட்டானானால் இறைவனுடன் கலந்து பிறப்பற்ற நிலை பெறலாம் என்பதே இதன் தத்துவம். அவர் யோகபாதாசனத்தில் சற்று கண் திறந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளார். இவரது காலில் சுற்றியுள்ள வஸ்திரத்தை யோக பட்டம் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !