சனிதோஷம் போக்கும் கொடுகொட்டி பாட்டு!
ADDED :4130 days ago
ஐயப்பன் கோயிலை அடுத்து மஞ்சமாதா சந்நிதி உள்ளது. இங்கு, பக்தர்கள் மஞ்சள்பொடி துõவி, தேங்காய் உருட்டி வலம் வந்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்வர். இங்குள்ள மணி மண்டபத்தில் தான் ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி வைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். இங்கு தான் கொடுகொட்டி பாடல் பாடுவது வழக்கம். சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டி கலைஞர்களை பாடச்செய்து மஞ்சமாதாவை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.