உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவில் திருப்பணிக்கு பாலாலயம்!

கோதண்டராமர் கோவில் திருப்பணிக்கு பாலாலயம்!

செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் திருப்பணிகள் செய்ய  பாலாலயம் செய்தனர். செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 700 ஆண்டுகள்  பழமையான கோதண்டராமர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கிருஷ்ணவேணிதாயார் கோவிலை 3 கோடியே 58 லட்சத்து 92, ஆயிரத்து 400  ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க உள்ளனர். இதற்கான பூமி பூஜை, பாலாலயம் நேற்று நடந்தது.  கோதண்டராமர் ஆலய  அறக்கட்டளை நிர்வாகி துரை ரங்கராமானுஜம் முன்னிலை வகித்தார். ஜமீன் எண்டத்துõர் வெங்கடேச பட்டாச்சாரியார் குழுவினர் பாலாலயம்  மற்றும் பூமி பூஜைகளை செய்தனர்.  வி.எச்.பி., மாநில இணை அமைப்பு செயலாளர் எத்திராஜ், பேச்சாளர் தாரா மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள்   கண்ணப்பிள்ளை, தேவராஜ், மற்றும் ராஜேந்திரன், சென்னை வழக்கறிஞர் கணேஷ், விழா குழு கணேசன், செஞ்சி தொழிலதிபர் பாபு,  வழக்கறிஞர்கள் ஆத்ம லிங்கம், ராமச்சந்திரன், ஜானகிராமன், ராமமூர்த்தி, சுப்பிரமணி, குருகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !