கெங்கையம்மன் கோவிலில் கொடிமரம் ஸ்தாபனம்!
ADDED :4012 days ago
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவிலில் கொடிமரம் ஸ்தாபன நிகழ்ச்சி நடந்தது.தட்டாஞ்சாவடியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில், கொடிமரம் ஸ்தாபனம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், கொடிமரம் ஸ்தாபனம் செய்யப்பட்டது.கோவில் தனி அதிகாரி பரமசிவம், திருப்பணி குழு தலைவர் சங்கரலிங்கம், சுந்தர விநாயகர், முத்துமாரியம்மன், கெங்கையம்மன் கோவில் திருப்பணிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.