உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலாலயம்

பரமக்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலாலயம்

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பணியின் முன்னோட்டமாக, கோயில் கோபுரம், விமானங்களுக்கு பாலாலயம் செய்யும் விழா நடந்தது. நவ., 26 மாலை கணபதி பூஜை, முதல்கால யாகபூஜைகள், இரவு 8:00 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை 2 ம் கால யாகபூஜையுடன், 10:30 க்கு மகாபூர்ணாகுதிகள் நடந்து, அனைத்து விமான படங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோபுரங்களுக்கும் வர்ணம் தீட்டும் பணிகள் துவங்கவுள்ளது. ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை, கோயில் பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !