காளியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :4012 days ago
இடைப்பாடி:இடைப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டியில், ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ காளியம்மன் கோவில்களின் கும்பாபிஷேகத்திற்காக, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தகுடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இடைப்பாடி, காட்டுவளவு பகுதியில் உள்ளது பஞ்சமுக விநாயகர் மற்றும் காளியம்மன் கோவில். கடந்த, 2012ம் ஆண்டு துவங்கிய கட்டிட பணி முடிந்து, கோவிலின் கும்பாபிஷேகம் இன்று நடக்கவுள்ளது. கும்பாபிஷேகத்திற்கு கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுவதற்காக கல்வடங்கத்தில் உள்ள காவிரி ஆற்றிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், குடங்களில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில், கவுண்டம்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.