உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்

அத்திமாஞ்சேரிபேட்டை : அரிகர புத்திர அய்யப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. உற்சவர் வீதியுலா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த, கர்லம்பாக்கம் கிராமம் ஏரிக்கரையில் அய்யப்ப சுவாமி கோவில், புதிதாக கட்டப்பட்டு, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. ஓராண்டாக கோவில் கட்டும் பணியில், கிராமவாசிகள் ஈடுபட்டு வந்தனர்.பணிகள் முடிந்து, நேற்று, கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை மற்றும் புதிய சிலைகள் கரிக்கோல ஊர்வலம், நேற்று முன்தினம் நடந்தது. மாலை 4:30 மணியளவில், மூலவர் அய்யப்பன், முருகர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.நேற்று, காலை 7:30 மணிக்கு, யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள், வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓத, கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின், மூலவர் அய்யப்ப சுவாமி மற்றும் விநாயகர், முருகர் சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மாலை 6:00 மணிக்கு உற்சவர் அய்யப்ப சுவாமி வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !