உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுத்தாங்கல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

காட்டுத்தாங்கல் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் : திருக்கழுக்குன்றம் அடுத்த, வடகடம்பாடி (மதுரா) காட்டுத்தாங்கல் கிராமத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றம் அடுத்த, நெ.51, வடகடம்பாடி (மதுரா) காட்டுத்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள, ஓம் ஸ்ரீவெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன் மண்டபம், நவக்கிரக மண்டபம் அமைத்து, பஞ்ச வண்ணங்கள் தீட்டப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின.25ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, முதல்கால யாகசாலை பூஜையும்; 26ம் தேதி காலை, 6:00 மணிக்கு, இரண்டாம்கால யாகசாலை பூஜையும்; மாலை, 6:00 மணிக்கு; மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று காலை, 5:45 மணிக்கு, நான்காம்கால யாகசாலை பூஜையும்; காலை, 8:00 மணிக்கு கலச புறப்பாடும், அதனைத் தொடர்ந்து, கோவிலின் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு, 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !