பரமக்குடியில் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3934 days ago
பரமக்குடி: பரமக்குடி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை வளாகத்தில் உள்ள செல்வ நர்த்தன விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நவ., 26 ல் காலை 10:00 மணிக்கு பெருமாள் கோயில் வைகை ஆற்று படித்துறையில் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமத்துடன், யாகசாலை பூஜைகள் துவங்கின.நேற்று மகாபூர்ணாகுதிகள் நடந்தன. அதன்பின், சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை விமான கலசத்திற்கு ஊற்றினர். பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காரைக்குடி மண்டல பொது மேலாளர் பாலகிருஷ்ணசாமி, கமர்ஷியல் மேனேஜர் பார்த்திபன், ராமநாதபுரம் கோட்ட மேலாளர் சுந்தரபாண்டியன், பரமக்குடி மேலாளர் தமிழ்மாறன், தொழிற்சங்க தலைவர்கள், ஊழியர்கள், கலந்து கொண்டனர்.