விருதுநகர் சவேரியார் ஆலய விழா துவக்கம்!
ADDED :4011 days ago
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் புனித சவேரியார் ஆலய விழா நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மறைவட்ட அதிபர் ஞானப்பிரகாசம் அடிகளார் கொடி ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். சவேரியார் நகர் பாதிரியார் ஜோசப் ராஜசேகர் அடிகளார், எஸ்.எப்.எஸ்., மெட்ரிக் பள்ளி முதல்வர் பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை நவநாள் திருப்பலி, மறையுரை நடக்கிறது. 9ம் நாளான டிச.,6ல் தேர்பவனி நடக்கிறது.