மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சம்பக சஷ்டி விழா!
ADDED :4011 days ago
பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், 12 ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா பைரவர் சந்நதியில் நடந்தது. நவ., 21 ல் மாலை 6:30 மணிக்கு அனுக்கையுடன் துவங்கிய விழாவில், 22 ல் காலை 10:00 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை விபூதி காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தினமும் காலை அபிஷேகம், மாலையில் பச்சை, சிகப்பு, வெள்ளை சாத்தி, வெண்ணெய், சந்தனக் காப்பு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. நவ., 28 ல் பாவாடை நைவேத்யம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அன்னதானத்துடன் விழா நிறைவடைந்தது.