உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னதானம் வழங்கும் திட்டம் 206 கோயில்களுக்கு விரிவாக்கம்

அன்னதானம் வழங்கும் திட்டம் 206 கோயில்களுக்கு விரிவாக்கம்

சென்னை: தமிழகத்தில் தற்போது, 518 கோயில்களில், அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மேலும், 206 கோயில்களுக்கு விரிவுப்படுத்தப்படும், என, அமைச்சர் செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: கோயில்கள் வருமானத்தை பெறுவதில், செயல் அலுவலர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். கோயிலுக்கு சொந்தமான கடைகள், மனைகள் ஆகியவற்றை, வணிக நோக்கத்திலும், குடியிருப்புக்காகவும், அனுபவித்து வரும் வாடகைத்தாரர்களை அவ்வப்போது அணுகி, வாடகை வசூலிப்பதை வழக்கப்படுத்த வேண்டும். நன்செய், புன்செய் குத்தகைத்தாரர்களிடம், மனித நேயத்துடன் அணுகி, வாடகை பாக்கி வசூலிக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கு இடம் அளிக்கக் கூடாது. தற்போது, 518 கோயில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. இத்திட்டம் மேலும், 206 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்படும். பழநி மற்றும் ஸ்ரீரங்கத்தில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயில்களில் உள்ள விலை மதிப்பற்ற புராதன உலோகத் திருமேனிகள் மற்றும் சிலைகளை பாதுகாக்க, தற்போது, 19 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் உள்ளது. புதிதாக, 15 மையங்கள், 14.19 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !