உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ரூ.3 லட்சத்தில் மேற்கூரை!

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ரூ.3 லட்சத்தில் மேற்கூரை!

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில், ரூ.3 லட்சம் செல்வில் மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில், பஞ்சமூர்த்திகள் உலா வரும் உட்பிரகார பகுதியில், மேற்கூரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, புனிதவதியார் வழிபாட்டு மன்றத்தினரின் ஏற்பாட்டின்பேரில், பக்தர்களிடம் பெறப்பட்ட நிதி மற்றும் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வழங்கிய தொகையில், ரூ. ௩ லட்சம் செலவில், 60 அடி நீளம், 20 அடி அகலத்தில் இரும்பு தூண்களால் கோவில் உட்பிரகாரத்தில் மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. வேளாண் நிலையத்தலைவர் சுரேஷ், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் புனிதவதியார் வழிகாட்டு மன்றத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !