உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை தீப திருவிழா: கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்!

தி.மலை தீப திருவிழா: கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபம், ஐந்தாம் நாள் விழாவில், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், ஐந்தாம் நாளான நேற்று, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், கண்ணாடி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். அதனை தொடர்ந்து இரவு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், சமேத அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர், ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது, நேர்த்திக் கடனை செலுத்தி ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !