சென்னையில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண மஹோத்சவம்!
ADDED :4010 days ago
சென்னை: ஸ்ரீனிவாச திருக்கல்யாண மஹோத்சவம் சென்னையில் நேற்று நடந்தது. திருநெல்வேலி வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில், புதிதாக, 53 லட்சம் ரூபாய் செலவில், திருத்தேர் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திருப்பணிக்காக நிதி திரட்ட, சென்னையில் உள்ள நாரதகான சபாவில், ஜி.எ. அறக்கட்டளை, ஸ்ரீ லட்சுமி வல்லப அறக்கட்டளை சார்பில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண மஹோத்சவம் நேற்று நடந்தது.இதையொட்டி, மேள வாத்தியம், வேதகோஷம், பகவத் பிரார்த்தனை, புண்ணியாக வஜனம், வஸ்திர சமர்பணம், காப்புகட்டுதல், மாலைமாற்றுதல், ஊஞ்சல் பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.இதையடுத்து, நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான, ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, திருத்தேர் அமைக்க நன்கொடை வழங்கினர்.