உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

திருப்பூர்: வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் நடக்கிறது.  நவ., 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு, விமானங்களுக்கு திருமஞ்சனம், புதிய எம்பெருமான்களுக்கு ஜலாதி வாசம், மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. 30ம் தேதி காலை 7.00 மணிக்கு, புதிய விமானங்கள் மற்றும் எம்பெருமான்களுக்கு சாந்தி ஹோமம், நீட ஸ்தாபனம், மகா அபிஷேகம் நடக்கிறது. 10.00 மணிக்கு கும்ப, மண்டல, பிம்ப அத்யாதி பூஜைகள் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு, 108 கலச மகா அபிஷேகம், இரவு 11.00 மணி வரை யாக வேள்வி நடக்கிறது. டிச., 1ம் தேதி காலை 7.00 மணிக்கு, சாந்தி ஹோமம், 9.00 மணிக்கு கலசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.47 மணிக்கு, விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 10.22க்கு, மூலவர்களுக்கு கும்பாபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து, அன்னதானமும், இரவு 7.00 மணிக்கு கருட சேவை புறப்பாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !