லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை!
ADDED :4253 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரிலுள்ள, லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், மூன்றாம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 8.00 மணியிலிருந்து இரவு 8.00 மணி வரை கோவிலில் உள்ள, நவ நரசிம்மர் மற்றும் பானக நரசிம்மர் ஆகியோருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.லட்சார்ச்சனையில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி, பக்த ஜன சபையார் செய்திருந்தனர்.