அய்யப்ப சுவாமி வீதியுலா!
ADDED :4010 days ago
பள்ளிப்பட்டு: சபரிமலை யாத்திரை குழுவினரின், 26ம் ஆண்டு இருமுடி கட்டும் நிகழ்ச்சியை ஒட்டி, தீமிதி திருவிழா மற்றும் ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், புலி வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். சபரிமலை யாத்திரை குழுவினர், நேற்று முன்தினம், பள்ளிப்பட்டில் இருந்து இருமுடி கட்டி, பயணத்தை துவக்கினர். 26ம் ஆண்டு யாத்திரையை ஒட்டி, தீமிதி திருவிழா மற்றும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு, அய்யப்ப சுவாமி பஜனை மண்டபம் எதிரே மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், மாலை அணிந்து விரதம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு 10:00 மணிக்கு, ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, அய்யப்ப சுவாமி, புலி வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார்.