புதுச்சேரி ஆஞ்ஜநேயர் கோவிலில் வருடாபிஷேக விழா!
ADDED :4010 days ago
புதுச்சேரி: தருமாபுரி ஆஞ்ஜநேயர் கோவிலில், வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. தருமாபுரி ஆஞ்ஜநேயர் சுவாமி கோவிலில், வருடாபிஷேக விழா கடந்த 29ம் தேதி மாலை 5.30 மணிக்கு வினாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை காலை 7.00 மணிக்கு கணபதி ஹோமம், ராம மந்திரம், அனுமன் மூல மந்திர ஹோமம் நடந்தது. காலை 8.00 மணிக்கு, திரவுபதியம்மன் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் புறப்பாடு நடந்தது.காலை 10.20 மணிக்கு, ஆஞ்ஜநேய சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனத்துடன் வருடாபிஷேக விழா நடந்தது. மாலை 6.00 மணிக்கு சீதா ராம கல்யாண உற்சவம் நடந்தது.