கொத்தாம்பாக்கத்தில் கும்பாபிஷேக விழா!
ADDED :3994 days ago
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் கொத்தாம்பாக்கம் கிராமத்தில் செல்வ வினாயகர், பாலமுருகன் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஆகிய னவும், காலை 8 மணிக்கு கலசங்களில் புனித நீர் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு செல்வவினாயகர், பாலமுருகன் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கவிதாகுமார், துணை தலைவர் மகாலட்சுமிபாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர்ராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் சுவாமிகளின் வீதியுலா காட்சி நடந்தது.