உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடியில் ரூ.70 லட்சம் செலவில் திருத்தேர் செய்யும் பணி!

திட்டக்குடியில் ரூ.70 லட்சம் செலவில் திருத்தேர் செய்யும் பணி!

திட்டக்குடி: திட்டக்குடியில் வைத்தியநாத சுவாமி கோவி லில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திருத்தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2015 ஜனவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கோவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 70 லட்சம் ரூபாய் செலவில் வைத்தியநாதசுவாமி, அசனாம்பிகை, வினாயகர் சுவாமிகளுக்கு திருத்தேர் செய்யும் பணி நடக்கிறது. அரும்பாவூர் சின்ராஜ் ஸ்தபதி தலைமையில் குழுவினர் புதிய தேர்களை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி நடந்தது. இதையொட்டி கோவில் சிவாச்சாரியார் தண்டபாணி குருக்கள் தலைமையில் வேதவிற்பன்னர்கள் குழுவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !