நந்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
ADDED :18 hours ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. பால், பன்னீர், இளநீர் உள்பட திரவிய அபிஷேகங்களும், தொடரந்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் செய்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.