உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கலூர் ஆதி கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

பொங்கலூர் ஆதி கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்

பொங்கலூர்; பொங்கலூர் பிரகன்நாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு காய் அலங்காரத்திலும், மதியம், 12:00 மணிக்கு கனி அலங்காரத்திலும், மாலை மலர்மாலை அலங்காரத்திலும் கைலாசநாதர் காட்சி அளித்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவகுருக்கள் தலைமையிலான மாணவ, மாணவியர் பங்கு கொள்ளும் திருமுறை, திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி, பக்கவாத்தியம் நடந்தது. காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். இதே போல பொங்கலூர் சின்னாரியபட்டி மங்களாம்பிகை உடனமர் மாதவீஸ்வர சுவாமி கோவில், கண்டியன் கோவில் கருணாம்பிகை உடனமர் கண்டீஸ்வர சுவாமி கோவில், பெருந்தொழுவு பாண்டீஸ்வரர் சுவாமி கோவில், புத்தரச்சல் சோழீஸ்வர சுவாமி கோவில், குளத்துப்பாளையம் விசாலாட்சி உடனமர் காசி விஷ்வநாதர் உள்ளிட்ட கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !