முத்துமாரியம்மன் கோவிலில் புஷ்ப அலங்கார பூஜை!
ADDED :3989 days ago
புதுச்சேரி: காராமணிக்குப்பம் அங்காள பரமேஸ்வரி முத்துமாரியம்மன் கோவிலில், காராமணிக்குப்பம் அய்யப்ப பக்தர்கள் சார்பில் 10ம் ஆண்டு புஷ்ப அலங்கார பூஜை நேற்று நடந்தது. மாதா குரு பூஜையுடன் விழா துவங்கியது. அதைத்தொடர்ந்து நவகிரக பூஜை, விளக்கு பூஜை, அய்யப்ப சுவாமி பஜனை நடந்தது. பூஜைகளை அரியாங்குப்பம் குருசாமி சிவராஜ் நடத்தினார்.