உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்தீசுவரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!

மருந்தீசுவரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!

திருவான்மியூர்: மருந்தீசுவரர் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நடந்த, 1,008 சங்காபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவான்மியூரில் அமைந்துள்ளது மருந்தீசுவரர் கோவில். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற மிகப்பழமையான இந்த கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, 1,008 வலம்புரி சங்காபிஷகம் நடத்தப்பட்டது.இதை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர அனுக்ஞை நடந்தது. அதை தொடர்ந்து, யாகசாலை வளர்க்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், மகா தீபாராதனையும் நடந்தது. பின், கலசபுறப்பாடு நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மருந்தீசுவரருக்கு, 1,008 வலம்புரி சங்குகளில் மந்திர உரு செய்யப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் நடத்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளை பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !