உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாசியால் மாசடையும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்!

பாசியால் மாசடையும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் தேக்கும் பணி அக்டோபரில் துவங்கியது. இதற்காக தெப்பத்தின் மைய மண்டபம் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.தெப்பத்தின் தெற்கில் பெரும் பகுதியில் பாசி படர்ந்து தண்ணீரை மாசடைய செய்கிறது. குப்பை, பாலிதீன் கழிவுகள் மிதக்கின்றன. தெப்பத்தின் பக்கவாட்டு சுவர்களில் புதர் போல் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் பக்கவாட்டு சுவர் பலமிழக்கும் அபாயம் உள்ளது. கிழக்குப்பகுதியில் தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷன் இருந்தும் இரவில் தெற்குப்பகுதி பக்கவாட்டு சுவர்களில் அமரும் ’குடி’மகன்கள் மது அருந்தி விட்டு கழிவுகளை தெப்பத்தில் வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தன்னார்வலர்கள், உழவாரப்பணி ஊழியர்கள், பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கோயில் நிர்வாகம் ஒருங்கிணைத்து மாசடைந்து வரும் தெப்பத்தை துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !