உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம் : காரமடை அருகேவுள்ள சின்னதொட்டிபாளையத்தில் கருப்பராய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. காரமடையை அடுத்த பெள்ளாதி ஊராட்சி, சின்னதொட்டிபாளையம் வடக்கு தோட்டத்தில் மிகவும் பழமையான கருப்பராய சுவாமி, கன்னிமார், முனியப்பன் ஆகிய சுவாமி கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் செய்து, கருவறை, விமானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன. கும்பாபிஷேக விழா கடந்த 29ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலையில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் காலையில் 16 வகையான அபிஷேக வழிபாடும், இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. கருப்பராய சுவாமிக்கு சிரவையாதீனம் கவுமார மடாலய குமரகுருபர சுவாமியும், முனியப்ப சுவாமிக்கு பேரூராதினம் இளைய பட்டம் மருதாசல அடிகளும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !