உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலைக்கு நடைபயணம் வழியனுப்பும் விழா!

சபரிமலைக்கு நடைபயணம் வழியனுப்பும் விழா!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இருந்து சபரிமலைக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களை வழியனுப்பும் விழா நடந்தது. நெல்லிக்குப்பம்  அருள்தரும் ஐயப்பன் கோவிலில் இருந்து எட்டாவது ஆண்டாக வெள்ளகேட் நாராயணன் குருசாமி தலைமையில் சபரிமலைக்கு நடைபயணமாக  செல்லும் பக்தர்களை வழியனுப்பும் விழா நடந்தது. ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. சபரிமலைக்கு நடைபயணம் செல்லும்  நாராயணன், பெத்தாங்குப்பத்தைச் சேர்ந்த ஜெயசங்கர், பாலமுருகன், ராஜதுரை ஆகியோரை வாழ்த்தி வழியனுப்பினர். பூஜைகளை முருகன் குருக் கள் செய்தார். வைத்தி, குமார், ராதா, சிவகுருநாதன், கல்யாணசுந்தரம், ரவிக்குமார் பங்கேற்றனர். வழியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்தபடி  15 நாட்களில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்போம் என நாராயணன் குருசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !