உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதனபுரீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்

சதனபுரீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை சச்சிதானந்தவல்லி உடனுறை சதனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. கலசங்கள், 108 சங்குகள் ஸ்தாபிதம் செய்து, தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் நடந்தது. சித்தாந்த சைவநெறி சங்கத்தினர் பூஜைகளை செய்தனர். தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்யப்பட்டது. சுவாமிக்கு பக்தர்களின் கைகளால் 108 சங்காபிஷேகமும், அம்பாளுக்கும் மகா அபிஷேகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தர்மகர்த்தா நடராஜன், நித்ய பூஜை செய்யும் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !