மயிலம் கோவிலில் இன்று தீபத்திருவிழா
ADDED :3975 days ago
திண்டிவனம்: மயிலம் முருகன் கோவிலில் இன்று தீபத்திருவிழா நடக்கிறது. மயிலம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகை விழா நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மண்டபத்தில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 9:00 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவில் ராஜ கோபுர உச்சியில் மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றும் விழாவும், சொக்கபனையும் கொளுத்தபடுகிறது. தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் எதிரே உள்ள கல் தூண் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.