உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜர் கோவிலில் கார்த்திகை தீப விழா!

தியாகராஜர் கோவிலில் கார்த்திகை தீப விழா!

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக நடந்தது. திருவாரூர் தியாகராஜர் கோவில் எதிரில் உள்ள கமலாலய குளத்தின் நடுவில் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்திய பின், பக்தர்கள் வாழை மட்டையில் தீபமேற்றி குளத்தில் விட்டு, வேண்டுதலை நிறைவேற்றினர். முருகன், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோவில்களில் 50 அடி உயரத்தில் ராட்சத சொக்கப்பனை கொளுத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று சிவாயநம என முழக்கமிட்டனர். தியாகராஜர் கோவில் தெற்கு கோபுர வாசலில் உள்ள ராஜதுர்க்கை கோவிலில் உலக அமைதி வேண்டி 1008 தீப விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !