உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் துர்நாற்றம்!

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் துர்நாற்றம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கி கிடக்கும் கடல் பாசி, பக்தர்கள் வீசி செல்லும் கழிவு துணிகளால் துர்நாற்றம் வீசுகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்கின்றனர். இத்தீர்த்தத்தில், சன்னதி தெரு, கிழக்கு தெரு, நான்கு ரதவீதியில் உள்ள தனியார் லாட்ஜ், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலந்து, தீர்த்தம் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், நவம்பர், டிசம்பரில் வீசும் வடகிழக்கு பருவக் காற்றால், கடலுக்குள் வளரும் கடல் பாசிகள் கரை ஒதுங்குவது வழக்கம். இந்தாண்டு அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கிய கடற்பாசிகளை அகற்றாததால் கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பாசிகளுடன் பக்தர்கள் விட்டு சென்ற கழிவு துணிகளும் கடற்கரை முழுவதும் பரவி கிடப்பதால், பக்தர்கள் அருவருப்புடன் நீராடி செல்கின்றனர். அக்னி தீர்த்த கரையில் ஒதுங்கி கிடக்கும் கடற்பாசி, துணிகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்ற வேண்டும்,என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !