கோவில்களில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி கோலாகலம்!
ADDED :3994 days ago
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், திருக்கார்த்திகை தீப விழாவையொட்டி, சிறப்பு வழிபாடுகளும், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் தீப ஜோதி ஏற்றப்பட்டதும், சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். மாரியம்மன் கோவிலில், விக்னேஸ்வர பூஜை உட்பட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மக்கள் வீடுகளில் விளக்கேற்றி, திருக்கார்த்திகை தீப விழாவை கொண்டாடினர். வைணவ தலங்களில், ஜோதியேற்றுதல் உட்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.