உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாண்டிக்குடி கோயில் விழா: பக்தர்கள் சேத்தாண்டி வேடம்!

தாண்டிக்குடி கோயில் விழா: பக்தர்கள் சேத்தாண்டி வேடம்!

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி கோயில் திருவிழாவில் பக்தர்கள் ’சேத்தாண்டி’ வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். கொடைக்கானல் மலையில் உள்ள தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழா நடக்கிறது. இதில் கிராம மக்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி உடல் முழுவதும் சேறு பூசி ’சேத்தாண்டி’ வேடமிட்டு, ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இதில் பங்கேற்றால் விவசாயம் செழித்து, நோய் நீங்கும் என்பது ஐதீகம். கிராம பட்டக்காரர் மங்களகாந்தி கூறியதாவது:கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கு, தாண்டிக்குடி தான் தெய்வ வழிபாட்டுக்கு தாய் கிராமமாகும். இந்த விழா ஏழு தலைமுறையாக நடக்கிறது. அனைத்து கிராமத்தினரும் ’சேத்தாண்டி’ வேடமிடுவர், என்றார். கோயில் மேலாளர் இளங்கோவன் கூறியதாவது: சேத்தாண்டி வேடமிட்டால் தோல் நோய் குணமாகிறது. விவசாயம், நோய், நொடிகள் நீங்கி கிராமம் செழிப்படையும். முன்னோர்கள் கடைப்பிடித்ததை நாங்கள் பின்பற்றுகிறோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !