உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37645_105738199.jpgஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_37645_105745592.jpgஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்!பாரிமுனை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், நேற்று, 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. வரும், 12ம் தேதி காளிகாம்பாள் கோவிலில், குத்து விளக்கு பூஜை நடைபெறஉள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றன. சிவனுக்கு மிகவும் உகந்ததாக கூறப்படும், நான்காவது வாரமான நேற்றைய கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு, 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.காலை 11:00 மணிக்கு துவங்கிய சங்காபிஷேகம், மதியம் 2:30 மணிக்கு நிறைவு பெற்றது. பின், மாலை 3:30 மணிக்கு பூர்ணாஹூதியும், அதையடுத்து, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 12ம் தேதி காளிகாம்பாள் கோவிலில், குத்து விளக்கு பூஜை நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !