உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆலயத்தில் குடில் அமைப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆலயத்தில் குடில் அமைப்பு!

அச்சிறுபாக்கம்:  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அச்சிறுபாக்கம் மழை மலை மாதா ஆலயத்தில், அமைக்கப்பட்ட குடிலை கிறிஸ்துவர்கள்  ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான, கிறிஸ்துமஸ் வரும் 25ம் தேதி உலகம் முழுவதிலும் கொண்டாட ப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய கிறிஸ்துவ ஆலயமாக அமைந்துள்ள, அச்சிறுபாக்கம் மழை மலை மாதா ஆலயத்தில், ஆண்டு÷ தாறும் கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், பண்டிகையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் குடில் நேற்றுமுன்தினம் அமைக்கப்பட்டது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த குடிலை, இங்கு வரும் கிறிஸ்துவர்கள் ஆர்வத்துடன் பார்த்து  செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !