உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாய ஜென்மராக்கினி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர் பவனி!

துாய ஜென்மராக்கினி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர் பவனி!

புதுச்சேரி: துாய ஜென்மராக்கினி அன்னை பேராலய ஆண்டு பெருவிழா தேர் பவனியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். புதுச்÷ சரி மிஷன் வீதியில் உள்ள துாய ஜென்மராக்கினி மாதா ஆலயத்தில்  3௨3வது ஆண்டு பங்கு பெருவிழா கடந்த மாதம் 29ம்தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து 6ம் தேதி ஒப்புரவு அருட்சாதனமும், 7 ம் தேதி முதல் திருவிருந்து நிகழ்ச்சியும் நடந்தது. பெருவிழா தேர்  பவனியை முன்னிட்டு, நேற்று காலை 6:30 மணிக்கு பேராயர் ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை 5:15 மணிக்கு மறை மாநில  உயர்கல்வி செயலாளார் சுவாமிநாதன், பெத்திசெமினேர் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் தோமினிக் சாவியோ தலைமையில் சிறப்பு திருப்பலி  நடந்தது. அதனை தொடர்ந்து, வண்ண விளக்குகள் ஜொலிக்க மாலை 6:00 மணியளவில் பெரிய தேர்பவனி நடந்தது.  இதில், ஏராளமான  கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இன்று 9ம் தேதி காலை 6:15  மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !