தண்டலம் அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை!
ADDED :4000 days ago
திருப்போரூர்: தண்டலம் அய்யப்பன் கோவிலில், 18வது ஆண்டு மகர விளக்கு பூஜை, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் அடுத்த தண்டலத்தில், அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம், 18வது ஆண்டு மகர விளக்கு பூஜை நடந்தது. மலர் அலங்காரத்தில் வாணவேடிக்கை முழங்க, அய்யப்ப சுவாமியும் வீதி உலா வந்தார். வழிநெடுகிலும் அய்யப்ப சுவாமியை, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், வீதி உலாவில் விளக்குகள் எடுத்து வந்தனர். முன்னதாக, காலை கணபதி ஹோமமும், மகா அபிஷேகமும் நடந்தது. மதியம், அன்னதானம் நடந்தது.