சோலை நகர் கோவிலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED :3954 days ago
புதுச்சேரி: சோலை நகர் விநாயகர் கோவிலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முத்தியால்பேட்டை, சோலை நகர் சோலை விநாயகர் கோவில் நிர்வாக குழு நிர்வாகிகள் தேர்தல் கடந்த 7ம் தேதி நடந்தது. வேளாண் துறை மற்றும் வனத்துறை சார்பு செயலர் சீனிவாசன், தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். இதில், கோவில் நிர்வாகக் குழு தலைவராக சண்முக சுந்தரம், துணைத் தலைவராக வேலாயுதம், செயலாளராக குணசேகரன், இணைச் செயலாளராக இளங்கோவன், பொருளாளராக வைரக்கண்ணு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக சிவராமன், கோவிந்தசாமி, ராமகிருஷ்ணன், கோபிநாத், சுப்ரமணியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.