சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :3954 days ago
புதுச்சேரி: சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில், கார்த்திகை மாதம் 4 வது சோமவாரத்தை முன்னிட்டு, குரு சித்தானந்த சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு சங்கு பிரதிஷ்டை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு குரு சித்தானந்த சுவாமிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.