கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை
ADDED :3955 days ago
துறையூர்,: துறையூர் ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தில், மலேசியா டெங்கிள் கிளை மகான் திருமூலர் சங்கம், லண்டன் மனோர்பார்க் கிளை அகத்தியர் சன்மாக்க சங்கம் சார்பில், கார்த்திகை மாத பவுர்ணமி பூஜை நடந்தது.ஆறுமுக அரங்க மகாதேசிக சுவாமிகள் தலைமை வகித்து, சன்மார்க்கத்தில் யோக நெறி, பவுர்ணமி நோன்பு, கீர்த்தி திரு அகவல், ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம், திருமந்திரம் உபதேசம், ஆலய வழிபாடு, இயற்கையும் ஞானிகளும், சொர்க்கவாசல், 131 சித்தர்கள் அருளிய மகான் அரங்கர் புகழ் மாலை ஆகிய "சிடிக்களை வெளியிட்டு அருளுரை வழங்கினார்.சரவண ஜோதி தரிசனம், வழிபாடு, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சித்தர்கள் வழிபாடு நடந்தது. தேச மங்கையர்க்கரசி, "துணையாய் வருவது முருகன் திருவடியே என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பட்டிமன்ற பேச்சாளர்கள் பேசினர்.