சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி லட்சார்ச்சனை
ADDED :3956 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த வைரபுரம் திரிபுரசுந்தரி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் லட்சார்ச்சனை விழா நடந்தது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகா அபிஷேகம் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. தமிழ்முறைப்படி பூஜைகளை நித்திய பூஜை செய்து வரும் திருஞானசம்பந்தன் செய்தார். தேவாரம், திருவாசகம் உள்பட பன்னிரு திருமுறைகள் பாராயணம் செய்யபட்டது. பூஜை ஏற்பாடுகளை மணி வாசகர் மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.