உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழுமலையானை தரிசிக்க ராஜபக் ஷே குடும்பத்தோடு ஆஜர்!

ஏழுமலையானை தரிசிக்க ராஜபக் ஷே குடும்பத்தோடு ஆஜர்!

திருப்பதி:மூன்றாவது முறையாக, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள ராஜபக் ஷே, ஏழுமலையானின் அருள் வேண்டி, திருப்பதிக்கு குடும்பத்துடன் வருகை புரிந்துள்ளார். ராஜபக் ஷேவின் வருகையை அடுத்து, பலத்த சோதனைகளுக்கு பிறகே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தரிசனம் முடிந்த உடன், ராஜபக் ஷே, விமானம் மூலம், இலங்கை திரும்பும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிசங்கர் ரெட்டி தெரிவித்தார்.ராஜபக் ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் இயக்கங்கள் பல்வேறு இடங்களில் போரட்டங்களை நடத்தின.இதற்கிடையே, ராஜபக் ஷே வருகையை யொட்டி, செய்தி சேகரிக்க சென்ற தமிழக ஊடகங்களுக்கு, ஆந்திர போலீசார் அனுமதி மறுத்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !