உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளிமலை குமார கோயிலுக்கு 12ம் தேதி காவடி பவனி

வேளிமலை குமார கோயிலுக்கு 12ம் தேதி காவடி பவனி

நாகர்கோவில்: வேளிமலை குமாரகோயிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான காவடிகள் வரும் 12-ம் தேதி பவனியாக வருகிறது. குறிப்பாக தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும், தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்தும் காவடி பவனி புறப்பட்டு குமார கோயில் செல்லும். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் மக்களின் பாதுகாப்பான மற்றும் செழிப்பான வாழ்க்கைக்காக இந்த காவடி பவனி நடத்தப்பட்டது. மன்னர் ஆட்சிக்கு பிறகும் இந்த மரபு அப்படியே கடைபிடிக்கப்படுகிறது. பத்மனாபபுரம், மணலி, வழிக்கலம்பாடு, குலசேகரம், கைதோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்காவடி, வேல்காவடி, பறக்கும் காவடி என நூற்றுக்கணக்கான காவடிகள் குமாரி கோயில் வந்து சேரும். பின்னர் முருகனுக்கு பல்வேறு அபிஷேகங்கள நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !